India
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
12 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொள்ளப் போவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, ஜனநாயக நடைமுறைக்கு விடப்பட்டுள்ள சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம், ஒன்றிய ஆளும் கட்சியின் கைப்பாவை அமைப்பாகக் கூடாது என்றும் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயன் தமநு முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) செயல்படுத்தப் படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஜனநாயக செயல்முறைக்கு ஒரு சவாலாகும். "வாக்களிப்ப- தைப் போன்றது எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்” (‘Nothing Like Voting, I Vote For sure') என்பது 2024-ஆம் ஆண்டு வாக்காளர் தினத்தின் செய்தி.
அது நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதைப் பிரச்சாரம் செய்தவர் களே, பீகாரில் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினர். குடிமக்கள் பதிவேட்டை குறுக்குவழியில் புகுத்துவதா? அரசியலமைப்புச் சட்டத்- தின் 326- ஆவது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ள உலகளாவிய வாக்களிக்கும் உரிமையை முழுமையாக மீறுவதாகும். ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை அரசியல் நலன்- களின்படிபறிக்க முடியாது. எஸ். ஐ.ஆர். செயல் முறை தேசிய குடிமக்கள் பதிவேட்டை குறுக்கு வழியாக செயல்படுத்தும் நோக்கம் கொண்டது என்ற கவலை இங்கு வலுவடைந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர். மூலம் தங்களுக்கு ஏற்ற வகை- யில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்ற விமர்சனம் எந்த வகையிலும் மறுக்கப் படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பீகார் எஸ்.ஐ.ஆர் . -இன் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடித் தன்மை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருந்தாலும், அதே செயல்முறையை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்து வதை குற்றமற்றதாகக் கருத முடியாது. நீண்டகா- லத் தயாரிப்பும் ஆலோசனைகளும் தேவைப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு மற்றும் தீவிரமான திருத்தப் பணியானது, மக்களின் விருப்பத்தைத் தகர்க்கும் விதத்தில் அவசரகதியில் மேற்கொள்ளப்படுகிறது என்பது தெளிவாகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1950, மற்றும் வாக்காளர் பதிவுச் சட்டம்- 1968 ஆகியவற்றின் படி, தற்போதுள்ள பட்டியலின் அடிப்படையிலேயே வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
ஆனால், தற்போதுள்ள வாக்காளர் பட்டியல்களுக்குப் பதிலாக 2002--2004 பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் போது சிறப்பு தீவிர திருத்தம் சாத்தியமற்றது என்று மாநில தேர்தல் அதிகாரியே தெரிவித்திருந்தாலும், எஸ்.ஐ.ஆர். செயல்முறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் தேர்தல் ஆணையத்- தின் மீதுசந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மையையே பாதிக்கும் இத்தகைய முடிவுகளில் இருந்து ஆணையம் விலக வேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற நிறு வனங்கள் ஒன்றியத்தில் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக மாற அனுமதிக்கக்கூடாது. எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம்நிறைவேற்றிய ஒரே மாநிலம்கேரளம். ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆர்வமுள்ள அனைவரும் எஸ்.ஐ.ஆர். செயல்முறையின் இரண்டாம் கட்டத்திற்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!