India

கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!

ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி நேற்றிரவு ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 2.45 மணியளவில் இருசக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதியது.

சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம், பேருந்துக்கு அடியில் சென்று டீசல் டேங்கில் மோதியதில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீ பரவியது.

தீ வேகமாக பரவியபோதிலும், பேருந்தில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்ட பயணிகள் உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பல பயணிகளை மீட்டனர். பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தின் ஜன்னலிலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர்.

இந்த கோர விபத்தில் பயணிகள் 25 பேர் உயிரிழந்தனர். சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும்,இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Also Read: குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?