India
“முஸ்லீம்-குலாம் சிகிச்சை பார்க்க முடியாது..” -கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த உ.பி அரசு மருத்துவர்!
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் CAA, NRC போன்ற மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது.
அதுமட்டுமின்றி கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வருபவர்களை கல்வி நிலையங்களில் அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் பாஜக அரசு தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்ற நிலையில், ஹிஜாப் அணிவது என்பது அவரவர் விருப்பம் என்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அண்மையில் கூட வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது.
இப்படி திட்டங்கள் மூலம் இஸ்லாமிய மக்கள் மீது ஒருபுறம் பாஜக வெறுப்பை காட்டி வந்தாலும், மறுபுறம் மக்களை தூண்டி இஸ்லாமிய மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் பலபேரை கொண்டு குவித்ததோடு மட்டுமின்றி, உ.பி. உள்ளிட்ட பாஜக ஆளும் ஒரு சில மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் தவறு செய்ததாக கூறி அவர்கள் வீடுகளை புல்டோசர்களை வைத்து இடித்து தரைமட்டமாகி இஸ்லாமிய மக்களை துன்புறுத்தி வருகிறது பாஜக.
இப்படியாக வெறுப்பையும் விஷமத்தையும் பரப்பி வரும் பாஜக, தற்போது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க முடியாது என்று கருணையே இல்லாமல் நடந்துகொண்டுள்ளதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் ஜவுன்பூரில் வசிக்கும் பர்வீன் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த சூழலில் இவர் கடந்த செப்.30-ம் தேதி இரவு நேரத்தில் பிரசவம் பார்ப்பதற்காக தனது கணவர் முகமது நவாஸுடன் அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர், இஸ்லாமியர்களுக்கு தான் மருத்துவம் பார்ப்பதில்லை என்று கூறி மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், அதே மருத்துவமனைக்கு சென்று பேட்டியெடுத்தார். அப்போது பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண் ஷமா பர்வீரன், "நான் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்தபோது, அந்த மருத்துவர் எனக்கு பிரசவம் பார்க்க மறுத்துவிட்டார். நான் முஸ்லீம் பெண் என்பதாலே அவர் மறுத்ததாக அவரே தெரிவித்தார்.
மேலும் அங்கிருந்த செவிலியரிடம் (Nurse) என்னை ஆபரேஷன் அறைக்கு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக அந்த செவிலியர் என்னை வேறு மருத்துவமனைக்கு செல்ல சொன்னார். அதுமட்டுமின்றி என்னைப் போலவே இன்னொரு முஸ்லீம் பெண்ணுக்கும் அவர் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார்." என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்த வீடியோ மற்றும் செய்தி இணையத்தில் வைரலான நிலையில், உ.பி. அரசுக்கும், அந்த பெண் மருத்துவருக்கும் கண்டனம் குவிந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தை வெளி கொண்டு வந்த 2 பத்திரிகையாளர்களின் மீது உ.பி. அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
வெறுப்புணர்வோடு மனிதாபிமானத்தை இழந்து நடந்துகொண்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காமல், உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்கள் மீது உ.பி. பாஜக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
‘‘இதுதான் RSS, பாஜக ஆட்சி” - முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்க்க மறுத்த உ.பி. அரசுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace... தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விவரங்களுடன் அறிக்கை!
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !
-
தொடங்கும் வடகிழக்கு பருவமழை... பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்... அமைச்சர்கள் கூறியது என்ன?