India
“குழாய்வழி எரிவாயு திட்டம் பயன்பாட்டுக்கு தயாராவது எப்போது?”: திருச்சி சிவா எம்.பி கேள்வி!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும், கண்டனங்களும் பின்வருமாறு,
“குழாய்வழி எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் பயன்பாட்டுக்கு தயாராவது எப்போது?” என திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி கேள்வி!
தேசிய எரிவாயு அமைப்பின்கீழ் குழாய்வழி எரிவாயு வழங்கும் திட்டத்திற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டின் தற்போதைய நிலை குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை முடிக்கப்பட்ட மொத்த கிலோமீட்டர் குழாய்வழிகள் என்ன? திட்டமிடப்பட்ட மைல்கற்களை அடைவதில் தாமதத்திற்கான காரணங்கள் என்ன? நிதி, நிலம் கையகப்படுத்துதல் அல்லது ஒழுங்குமுறை ஒப்புதல்கள் போன்றவற்றில் தாமதங்கள் ஏற்படுத்தும் காரணங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா? அவற்றை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
(ஈ) தேசிய எரிவாயு கட்டத்தை நிறைவு செய்வதற்கும் அனைத்து பிராந்தியங்களிலும் இயற்கை எரிவாயுவை சமமாக அணுகுவதை உறுதி செய்வதற்கும் புதுப்பிக்கப்பட்ட காலக்கெடு?
“இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கான நடவடிக்கை என்ன?” என திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கேள்வி!
பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலுவலையில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அரசு நிர்ணயித்திருக்கும் காலக்கெடு என்ன? PMUY திட்டத்தின் பயனாளிகளுக்கு சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கு அரசாங்கம் வழங்கும் மானியம் எவ்வளவு? தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் எத்தனை பேர் என்று அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?