India
“இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட OBC மருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை!” : பி.வில்சன் பெருமிதம்!
இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு மருத்துவ சேர்க்கையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டப் போராட்டம் நடத்தி, நீதியை வென்ற நாள் இன்று (ஜூலை 29).
இதனை பறைசாற்றும் வகையில், தி.மு.க வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன், “2021 - ஜூலை 29, அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள்!
சமத்துவ நாயகர், சமூகநீதிக் காவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிய வழியில், OBC மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம்!
இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட OBC மருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை !
14 வருடங்களாக மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்ததன் மூலம், ஆண்டுதோறும் இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் 4,022 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளில் 1000 இடங்களும் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்
கழகத்தலைவர் – முதலமைச்சர் அவர்களின் பணி மகத்தானது மட்டுமல்ல… வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. சாதனைப் பயணம் தொடரட்டும்! சமூகநீதி தீர்ப்பு சிறக்கட்டும்!” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!