India
கோவிலில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை ? சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது கர்நாடக அரசு !
கர்நாடகா மாநிலம் தட்சினகன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அமைந்துள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் அந்தப் பகுதியில் புகழ்பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோவிலை 995 முதல் 2014 வரை பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் (ஜூன்) 3ஆம் தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் கோவில் நிர்வாகத்தால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், கோவில் நிர்வாகம் தந்த அழுத்தம் காரணமாக அந்த சடலங்களை தான் அப்புறப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மங்களூரு நீதிமன்றத்தில், அந்த துப்புரவு தொழிலாளி ஆஜராகி தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்து விளக்கம் அளித்துள்ளார்.
அதோடு, பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே இப்புகாரை விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும் சிறப்பு நீதிபதி மற்றும் அரசு வக்கீல் நியமனம் செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரிக்க டிஜிபி அந்தஸ்து உள்ள காவல் அதிகாரி பிரனாப் மொஹான்ந்தி என்பவர் தலைமையில் கர்நாடகா அரசு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, "நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். காவல்துறையினர் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என கோரினால் நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்போம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !