India

கர்நாடகா: பாலியல் வன்கொடுமை செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை... கோவில் நிர்வாகத்தின் மீது புகார் !

கர்நாடகா மாநிலம் தட்சினகன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அமைந்துள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் அந்தப் பகுதியில் புகழ்பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த கோவிலை 995 முதல் 2014 வரை பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் (ஜூன்) 3ஆம் தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் கோவில் நிர்வாகத்தால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

மேலும், கோவில் நிர்வாகம் தந்த அழுத்தம் காரணமாக அந்த சடலங்களை தான் அப்புறப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மங்களூரு நீதிமன்றத்தில், அந்த துப்புரவு தொழிலாளி ஆஜராகி தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்து விளக்கம் அளித்துள்ளார்.

அதோடு, பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே இப்புகாரை விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும் சிறப்பு நீதிபதி மற்றும் அரசு வக்கீல் நியமனம் செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: “கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்!” : தி.மு.க எம்.பி.க்கள் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்!