India
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 900 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் ஒரு பகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின்போது, பாலம் வழியாக சென்ற 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்ததில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிக்னேஷ் மேவானி, ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
18 பேர் உயிரிழப்புக்கு காரணமான காம்பிரா பாலத்தின் பாதிப்பு குறித்து, அருகே வசிக்கும் பொதுமக்கள் பலமுறை எச்சரித்தும், அதனை ஆளும் பாஜக அரசு உதாசீனப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, 130 பேரின் உயிரை காவு வாங்கிய மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில், அதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியும் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிவதாக மேவானி குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்து விழுந்து பேரழிவுகளை ஏற்படுத்திய சம்பவங்கள் மட்டுமே ஊடகங்களில் வந்துள்ளதாகவும், ஆனால் உண்மையில், குஜராத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தாலுகாவிலும் பாலம் இடிந்து விழுவது போன்ற விபத்துகளும், பேரழிவுகளும், குஜராத்தில் ஊழல் நிறைந்த பாஜக அரசாங்கத்தின் கீழ் வழக்கமாகி விட்டதாக கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், குஜராத் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் 20-க்கு 20 என்ற விகிதத்தில் லஞ்சத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!