India
டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை... பெட்ரோல் பங்குகளில் தீவிர கண்காணிப்பு அமல் !
டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், பல்வேறு காரணங்களால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு பழைய வாகனங்கள் வெளியிடும் அதிகளவிலான கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணமாக திகழ்கிறது.
இதனால் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களும், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் இன்று முதல் தலைநகர் டெல்லியில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த டெல்லியில் உள்ள 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் போக்குவரத்து துறை, மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு காலாவதி ஆன வாகனங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி.என்.ஜி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!