India
தமிழ்நாடு, கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை... 1999 ஆம் ஆண்டுக்கு பின் நடந்த மாற்றம் என்ன ?
கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே இன்றே தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இன்று காலை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி அந்தமானில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை படிப்படியாக முன்னேறி தற்போது இந்திய நிலப்பரப்பை எட்டியுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா, கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது தென்மேற்குப் பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில், மழை அளவு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இருபதாம் நூற்றாண்டில் 1999 ஆம் ஆண்டு மே 19 தேதி 13 நாட்கள் முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!