India
வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் : ஒன்றிய அரசுக்கு மீண்டும் சாட்டை அடி!
ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உட்பட உச்சநீதிமன்றத்தில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், வக்ஃப் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதிப்பது என்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், ஒரு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது என்றும் வாதிட்டார். Gfx in இதையடுத்து, வக்ஃப் திருத்த சட்டத்தின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் வக்ஃப் சொத்துக்களை வகை மாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வக்ஃப் சொத்துக்களை பயனாளிகள் தொடர்ந்தாலோ, வக்ஃப் என்று அறிவிக்கப்பட்ட சொத்துக்களையோ, வக்ஃப் அல்லாத சொத்து என வகை மாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய திருத்த சட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதோரை உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வக்ஃப் சொத்து மீது தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும், வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Also Read
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!
-
”மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” : மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம்!
-
“உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!