India
பிரதமரின் அமெரிக்க பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன? : நாடாளுமன்றத்தில் தி.மு.க MP கேள்வி!
பிரதமர் மோடி அண்மையில் மேற்கொண்ட அமெரிக்க பயணங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை வெளிவிவாகரத் துறை அமைச்சர் விளக்க வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது F-35 போர் விமானங்கள் உள்ளிட்ட போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஏதேனும் ஒப்பந்தங்கள் ஒன்றிய அரசால் கையெழுத்திடப்பட்டுள்ளனவா? அவ்வாறெனில் அதைப் பற்றிய விவரங்கள் என்ன? இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எவ்வளவு ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன?
இந்தியாவிற்கும் பிரான்ஸுக்கும் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்களும் பெறப்பட்டுவிட்டனவா? அது பற்றிய விவரங்களைப் பற்றி கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்!
உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது வழக்கறிஞர் சமூகத்திடமிருந்தோ வேண்டுகோள்கள் ஒன்றிய அரசுக்கு வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால் அதுபற்றிய விவரங்கள் என்ன? இல்லையேனில் அதற்கான காரணங்களை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!