India
மத்திய பல்கலை. இளங்கலை பட்டப் படிப்புக்கான CUET-UG தேர்வு எப்போது நடைபெறும் - வெளியான அறிவிப்பு !
இந்தியா முழுவதற்குமான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (CUET-UG) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான க்யூட் (CUET-UG 2025) தேர்வு வருகின்ற மே மாதம் 8-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,தேர்வுக்கு https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுளது.
கூடுதல் விவரங்கள் என்ன ?
3 பாடங்கள் வரை விண்ணப்பிக்க கட்டணம்: பொது (General -UR)- ₹1000, ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) - ₹900, எஸ்சி (SC) /எஸ்டி (ST) / மூன்றாம் பாலினம் (Third gender) - ₹800
3 பாடங்களுக்கு மேல் கூடுதலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடங்களுக்கும் கூடுதல் கட்டணம் : பொது (General -UR)- ₹400, ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) - ₹375, எஸ்சி (SC) /எஸ்டி (ST) / மூன்றாம் பாலினம் (Third gender) - ₹350
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு செப்டம்பர் 2009 முதல் திருவாரூரில் இருந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூரில், வழங்கப்படும் இளங்கலைப் பட்டப் படிப்புகளின் விவரங்கள்:
1. இளங்கலை அறிவியல் – வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல்,கணிதம், இயற்பியல், (B.Sc Honours / Research) (பி.எஸ். சி ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)
2. இளங்கலை பொருளாதாரம் (B.A Honours / Research) (பி .ஏ. ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)
3. இளங்கலை - இசை (B.P.A Honours / Research) (பி பி ஏ. ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)
4. இளங்கலை - ஜவுளி (பி.எஸ்சி.,) ஜவுளி தொழில் நுட்பவியல் (பி.எஸ்சி.,), ஜவுளி வணிகப் பகுப்பாய்வு (பி பி ஏ.) - (மூன்று ஆண்டுகள்) (கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது)
இந்த ஆண்டு முதல் புதிய மாற்றங்களின் படி, மாணவர்கள் 12-ம் வகுப்பில் எந்த பாடத்திலும் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு எழுதலாம்,
புதிய மாற்றங்கள்படி, 12-ம் வகுப்பில் படிக்கும் பாடப்பிரிவைதான் உயர்கல்வியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், க்யூட் தேர்வில் 12-ம் வகுப்பில் பாடப்பிரிவிற்கு ஏற்ற பாடங்கள் என்று இல்லாமல், மாணவர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து அதற்கான தகுதியான பாடங்களுக்கான தேர்வை எழுதலாம்.
உதாரணத்துக்கு ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்து படித்திருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டங்களில் வரலாறு படிக்க வேண்டும் என்றால் க்யூட் தேர்வில் அதற்கான தகுதி பாடங்களை தேர்வு செய்து தேர்வு எழுதினால் அவர் வரலாறு படிக்கலாம். அதேபோன்று 12 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படித்திருந்து இளங்கலை அளவில் இயற்பியல் அல்லது வேதியல் அல்லது ஏதோ ஒன்று அறிவியல் பாடம் பிரிவு படிக்க விருப்பப்பட்டால் அதற்கான தகுதி பாடங்களை எடுத்து தேர்வு எழுதி விரும்பக்கூடிய பாடங்களை இளங்கலை பிரிவில் படிக்கலாம்
மேலும் விவரங்களை. https://cuet.nta.nic.in/ என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!