India
மத வெறுப்பு பேச்சு : கேரள பா.ஜ.க தலைவர் கைது -14 நாள் சிறை!
ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மத வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க தலைவர்கள் முதல் அக்கட்சியின் தொண்டவர்கள் வரை எல்லோரும் மத வெறுப்பையே பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், கேரள பா.ஜ.க மூத்த தலைவர் பி.சி. ஜார்ஜ், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈராற்றுபேட்டை போலீசில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பி.சி. ஜார்ஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தானர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பி.சி.ஜார்ஜை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், ஈராற்றுபேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, நீதிமன்றம் பி.சி. ஜார்ஜை 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!