India
”எதிர்க்கட்சிகள் கருத்தை பதிவு செய்யாத வக்ஃப் அறிக்கையை நிராகரிக்க வேண்டும்” : திருச்சி சிவா வலியுறுத்தல்
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வக்ஃப் வாரிய வரைவு சட்டத்திருத்த மசோதா, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த மசோதா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த மசோதா தொடர்பாக ஆய்வு நடத்தியது. இந்த கூட்டுக்குழுவில் 572 திருத்தங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் பா.ஜ.க வழங்கிய 22 திருத்தங்களுக்கு மட்டும் நாடாளுமன்ற கூட்டக்குழு ஏற்றுக்கொண்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் வழங்கிய திருத்தங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி இன்று நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு மல்லிகார்ஜுன கார்கே, திருச்சி சிவா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே,”வக்ஃப் வாரிய மசோதாவை நிராகரிக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் எத்தனையோ மசோதாக்களை காரணமின்றி நிராகரிக்கின்றனர். அப்படி இருக்கையில் எதிர்க்கட்சிகளில் கருத்துக்களை பதிவு செய்யாத இந்த வக்ஃப் வாரிய மசோதா மீதான அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
இதற்கு அடுத்து பேசிய திருச்சி சிவா, ”வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றும் விவகாரத்தில் ஒன்றிய அரசு விதிமுறை படி செயல்பட வேண்டும். எதிர்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவு செய்யாத இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!