India
”தி.மு.க முன்னெடுக்கும் போராட்டத்திற்கு சமாஜ்வாதி துணை நிற்கும்” : டெல்லியில் அகிலேஷ் உறுதி!
மாநில அரசுகளினால் கட்டமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமையை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஆளுநர்களுக்கு வழங்கும் வரையறைகளை உள்ளடக்கிய யுஜிசி வரைவு நெறிமுறைகள், மாநில அரசின் உரிமை பறிப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள இந்த வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தி.மு.க மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”தமிழ் மக்களுக்கு 4000 வருட வரலாறு இருக்கிறது. தொன்மையான மொழியும் பண்பாடும் இருக்கிறது. யுஜிசி புதிய நெறிமுறைகள் வெறும் கல்வி சம்பந்தப்பட்டது அல்ல. அது உங்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீது ஆர்எஸ்எஸ் தொடுக்கும் தாக்குதல். பிற பண்பாடுகளையும் வரலாறுகளையும் அழித்து ஒற்றைத் தன்மையை திணிப்பதுதான் ஆர்எஸ்எஸின் லட்சியம். ஆர்எஸ்எஸ்ஸின் காலாவதியான சித்தாந்தம் திணிக்கப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் எம்.பி, ”கல்வி உரிமைக்காக, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து பல போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது. அத்தனைப் போராட்டங்களையும் திமுகவுடன் சமாஜ்வாதி கட்சி துணை நிற்கும்” என பேசினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP பேசும்போது, ”ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். UGC-யின் வரை முறைகள் அகற்றப்பட வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமே குழுவில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் கல்வித்துறை பாதுகாக்கப்படும். திமுக மாணவர் அணி கையில் எடுத்துள்ள இந்தப் போராட்டம் வெற்றி பெறும்.” என கூறினார்.
இந்தப் போராட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !