India

”வாரண்ட் பிறப்பிக்கப்படும்” : பாபா ராம்தேவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் ஆதரவாளராக கருதப்படும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அண்மையில் கூட அலோபதி மருத்துவத்தை அவதூறு செய்யும் வகையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விளம்பரத்திற்கும் இந்திய மருத்துவ சங்கமே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு கொடுக்கப்பட்டது. நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மன்னிப்பு கேட்டு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டது பதஞ்சலி நிறுவனம். தற்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் பதஞ்சலி நிறுவனம் சிக்கியது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங் கள், மருந்துகள் ஆட்சேபணைக்குரிய விளம்பரங்கள் சட்டம் 1954இன் விதி களை மீறியதாக கேரள மாநிலம் பாலக் காடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரையும் நேரில் ஆஜராக பாலக்காடு மாவட்ட நீதிபதி 2 முறை உத்த ரவிட்டு இருந்தார். கடைசியாக பிப்ரவரி 1ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு நோட்டீஸ் அனுப்பட் டுள்ளது. ஆனால் இதுவரை இருவரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவன வழக்கு பிப்.1 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின் பாலக்காடு மாவட்ட நீதிபதி,”பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலை வர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் பிப்ரவரி 15ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப் பிக்கப்படும்” என அவர் உத்தரவிட்டார்.

Also Read: 'ஒரு பிராமணரோ'... சாதிய உணர்வை தூண்டும் வகையில் பேச்சு : சுரேஷ் கோபிக்கு வலுக்கும் கண்டனம்!