India
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வாட் வரி உயர்தப்பட்டு அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் ரூபாய் 2 விலை உயர்த்தப்பட்டு இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் ரூ. 91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக விற்பனையானது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ. 84.31, மாஹேவில் ரூ. 81.90 மற்றும் ஏனாமில் ரூ.84.75 இருந்து வந்தது.
தற்போது வாட் வரி உயர்வால் புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.96.24 பைசாவிற்கும், இதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.1.99 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.86.47 க்கும் இன்று காலை 6 மணி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!