தமிழ்நாடு

திமுக ஆட்சியில் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உறுதி !

திமுக ஆட்சியில் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருநெல்வேலிக்கு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி வரும் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் மிகப்பெரிய பரிமாண வளர்ச்சியை அடைய உள்ளது.

ஒன்றிய அரசின் மிகப்பெரிய அறிவியல் ஆய்வு நடத்தும் நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (சி எஸ் ஐ ஆர்) மூலம் புதிய ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சி எஸ் ஐ ஆர் நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். அங்கு மிகப்பெரிய ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது.

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய திட்டங்களையும், புதிய ஆராய்ச்சிகளையும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் உலகின் தலைமையகமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். சி எஸ் ஐ ஆர் நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது . சிப்காட் நிறுவனத்தின் மூலம் அதற்கான இடம் வழங்கப்பட உள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் அந்த நிறுவனத்தை தொடங்குவதற்கான அறிவிப்பு முதலமைச்சரால் வெளியிடப்படும்.

திமுக ஆட்சியில் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உறுதி !

தமிழ்நாடு எங்கும் மிகப்பெரிய வளர்ச்சியை முதலமைச்சர் கொண்டு வந்து சேர்த்துள்ளார். தற்போது தென்தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வின் பாஸ்ட் நிறுவனம் கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் டாடா சோலார் போன்ற நிறுவனங்கள் வந்துள்ளது. இன்னும் பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வரவுள்ளது.

நாங்குநேரி பகுதிக்கு மிகப்பெரிய விடியலை தர வேண்டும் என தொடர் முயற்சிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாங்குநேரி பொருளாதார மண்டலத்தில் தொழில் நிறுவனங்கள் கொண்டு வருவதற்கான சட்ட சிக்கல்கள் ஒன்றிய அரசிடம் உள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை டெல்லிக்கு சென்று அந்த பிரச்சனையை முடிப்பதற்கான பணிகளை தொழில்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வருவதற்கு திமுக அரசு நிச்சயம் உதவி செய்யும்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories