India
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவ.13 ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவ.20 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது.
இதில் ஹேமந்த் சோரன் தலைமையிலான இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில் இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது.
அதேபோல், பா.ஜ.க கூட்டணி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த பா.ஜ.கவின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்:
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 29
காங்கிரஸ் - 15
பா.ஜ.க - 22
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 4
மற்ற கட்சிகள் ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!