India
துண்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட உடல்... கையில் இருந்த குறியீடு... மும்பையை உலுக்கிய இளைஞரின் கொலை !
மகாராஷ்டிர மாநிலம் மும்பை, கோராய் என்ற பகுதியில் கடந்த நவம்பர் 1-ம் தேதி, சாக்குமூட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த மூட்டையில் இளைஞர் ஒருவரது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில், இருந்தது. இதைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் இந்த இளைஞர் யார் மேற்கொண்டு வந்தனர். அப்போது அவரது கையில், 'RA' என்ற எழுத்தில் டாட்டூ இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில், இந்த இளைஞர் தனது மகன் என்று பெரியவர் ஒருவர் அடையாளம் காட்டினார். அந்த இளைஞரின் பெயர் ரகுநந்தன் பஸ்வான் (21) என்றும், அவரது சொந்த ஊர் பீஹார் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து உயிரிழந்த ரகுநந்தன் பஸ்வானின் தந்தை, ஜிதேந்திர பசுவானிடம் விசாரிக்கையில் பல தகவல்கள் வெளியே வந்தது.
அதன்படி பீகார் மாநிலம் தர்பகங்காவைச் சேர்ந்த இளைஞர் பஸ்வான், அதே பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கும் என்பதால், அவரது கையில் RA என்று டாட்டூ குத்தியுள்ளார். இந்த சூழலில் இருவரது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே, இது ஊர் பஞ்சாயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசக்கூடாது என்று அறிவுறுத்தலின் பேரில், இருவரும் காதலும் அங்கேயே முறிந்து, பெண்ணை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அவரது குடும்பத்தினர். தொடர்ந்து பஸ்வானும், புனேவில் உள்ள ஒரு இடத்தில் பணியில் சேர்ந்தார். இருப்பினும் காதலை மறக்காத இருவரும், ஃபோனில் ரகசியமாக பேசி வந்துள்ளனர்.
இந்த சூழலில் மும்பையில் இருக்கும் தனது காதலியை சந்திப்பதற்காக கடந்த அக்டோபர் 31-ம் தேதி, வீட்டை விட்டு சென்ற பஸ்வான், அவருக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால் அதனை அந்த பெண்ணின் சகோதரன் முகமது சத்தார் எடுத்து பேசி, பயந்தரில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி பஸ்வானிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய பஸ்வானும், அவர் கூறிய இடத்திற்கு தனியாக சென்றுள்ளார்.
அங்கே வைத்து அந்த இளைஞருக்கு அளவுக்கு அதிகாமாக மது கொடுத்து குடிக்க வைத்து, பின்னர் அவரது கழுத்தை அறுத்துள்ளார் காதலியின் சகோதரன் முகமது சத்தார். தொடர்ந்து சடலத்தை அப்புறப்படுத்துவதற்காக, பஸ்வானின் உடலை துண்டுதுண்டாக வெட்டி, அதனை காலி பெயிண்ட் டப்பாவில் அடைத்து, அதை ஒரு சாக்குமூட்டையில் கட்டி, ரிக்ஷா வண்டி மூலம் கோராய் கடற்கரையில் வீசியுள்ளார்.
இதையடுத்தே போலீசார் அதனை மீட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் இளைஞரின் காதலியின் சகோதரன் முகமது சத்தாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகமது சத்தார் மீன் வியாபாரம் செய்து வந்துள்ள நிலையில், இளைஞர் பஸ்வானின் உடல் மீன் வெட்டும் கத்தியினாலே வெட்டப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால், அவரது சகோதரன் இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் மும்பையை உலுக்கியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!