India
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 19 இளைஞர்கள் : அனைவருக்கும் HIV தொற்று பரவியதால் அதிர்ச்சி !
உத்தரகாண்ட் மாநிலம் நானிடால் மாவட்டத்தில் உள்ள ராம் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதைப்பொருள் கொடுத்து பழக்கப்படுத்தியுள்ளனர். இதில் அந்த சிறுமி அதற்கு அடிமையாகியுள்ளது.
அதன்பின்னர் போதைப்பொருள் வேண்டும் என்றால் தங்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்று அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி அந்த பகுதியை சேர்ந்த 19 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்ந்து சில மாதங்களாக நடந்துவந்துள்ளது.
இதனிடையே சில இளைஞர்கள் காய்ச்சல், உடல் சோர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது அவர்களின் ரத்தமாதிரியை சோதனை செய்தபோது அவர்களுக்கு HIV தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியுடன் அனைவரும் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அனைவருக்கும் HIV தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் அதில் சில இளைஞர்களுக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில், அவர்களின் மனைவிகளுக்கும் HIV தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!
-
ரூ.1003 கோடி முதலீட்டில் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை : 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட இந்த செயலை அனுமதிக்க முடியாது : அமைச்சர் ரகுபதி கண்டனம்!