India
கோவிலில் வைத்து கணவரை கட்டிப்போட்டு மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி !
மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதியினர் அங்குள்ள பாபா பைரவா கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வழிபாட்டினை முடித்த அந்த தம்பதியினர் அங்குள்ள ஒரு பகுதியில் தங்கியிருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் இல்லாத பகுதியில் யாரும் இல்லாததை கண்ட 8 பேர் கொண்ட ஒரு கும்பல் இந்த தம்பதியினரிடம் வந்து தகராறு செய்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த கும்பல் கணவரைத் தாக்கி அவரை கட்டிபோட்டுள்ளனர்.
அதன் பின்னர் மனைவியை அந்த கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதோடு இந்த கொடூர செயலை அந்த கும்பல் வீடியோவாகவும் பதிவு செய்து, இந்த சம்பவம் பற்றி வெளியே சொன்னால் விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் குறித்து அந்த தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட ராவிஷ் குப்தா, லவ்குஷ் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, தீபக் கோரி, ராம்கிஷான் கோரி மற்றும் சுசில் கோரி உள்ளிட்ட 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்நிஷ் கோரி என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!