India
பாலியல் ரீதியாக துன்புறுத்தல் : பா.ஜ.க மூத்த தலைவர் மீது நடிகை குற்றச்சாட்டு!
உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூர் பா.ஜ.க நகர பிரிவின் தலைவராக இருப்பவர் புனித் தியாகி. இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றம் சாட்டி, தனது சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தி, போஜ்புரி, ஹிந்தி மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மும்பையை சேர்ந்த நடிகை, தன்னை நீண்ட காலமாக பாலியல் ரீதியாக சுரண்டியதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
நடிகையின் குற்றச்சாட்டை மறுத்த புனித் தியாகி, பதவி விலகுவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தின் பா.ஜ.க தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரியிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். புனித் தியாகி, தனது ராஜிநாமா கடிதத்தில் எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!