India
Time Machine மூலம் முதியவர்களை இளமையாக்குவதாக கூறி ரூ.35 கோடி மோசடி - கைவரிசை காட்டிய தம்பதி!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவரது மனைவி ரஷ்மி. இந்த தம்பதிகள், இஸ்ரேலில் இருந்து வரவைக்கப்பட்ட Time Machine மூலம் முதியவர்களை 25 வயது இளமையாக்குவதாக கூறி ஒரு சிகிச்சை மையத்தை திறந்துள்ளனர்.
இதற்கு 'ஆக்சிஜன் தெரபி' என்று அவர்கள் விளம்பரம் செய்துள்ளனர்.10 அமர்வுகளுக்கு ரூ.6 ஆயிரம் என கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் 3 வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் சிறப்பு பேக்கேஜ் என்றும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இளைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் முதியவர்கள் சிலர் இந்த 'ஆக்சிஜன் தெரபி' சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பின்னர்தான் இது மோசடி என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேணு சிங், தன்னை ரூ.10.75 லட்சம் வரை ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, 100க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், ரூ.35 கோடிக்கு முதியவர்களிடம் இந்த தம்பதி நூதனமாக மோடி செய்து தலைமறைவாகியுள்ளது. தற்போது மோசடி தம்பதியை போலிஸார் தேடிவருகின்றனர்.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?