India
“அழகான பெண்கள் இப்படிதான் செய்வார்கள்...” - பெண்களை கொச்சைப்படுத்திய பாஜக ஆதரவு எம்.எல்.ஏ. - பின்னணி?
மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மோர்ஷி (Warud-Morshi) தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் தேவேந்திர புயர் (Devendra Bhuyar). இவர் அம்மாநில பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவாரின் ஆதரவாளார் ஆவார்.
இந்த சூழலில் இவர் தற்போது பெண்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது கண்டனங்களை எழுப்பி வருகிறது. இதுகுறித்து தனது தொகுதியில் உள்ள இடத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற தேவேந்திர புயர் பேசியதாவது, “ஒரு பெண் அழகாக இருந்தால், அவர் உன்னையும், என்னையும் போன்ற ஒரு நபரை திருமணம் செய்ய விரும்ப மாட்டார். அந்த பெண் வேலை செய்யும் ஒரு ஆணையே தேர்ந்தெடுப்பார்.
குறிப்பாக விவசாயியின் மகனை அந்த பெண் தேர்ந்தெடுக்கவே மாட்டார். பெண்கள் வகையில் 1-வது தரத்தை சேர்ந்த பெண்கள், நல்ல படித்த, நல்ல பணியில் இருப்பவரையே தேர்ந்தெடுப்பார். 2-வது தரத்தில் இருக்கும் பெண், ஒரு கடை வைத்திருப்பவரையோ அல்லது சிறு தொழில் செய்பவரையோ தேர்ந்தெடுப்பார்.
அதே வேளையில் 3-வது தரத்தில் இருக்கும் பெண்தான், விவசாயிகளின் மகனை தேர்ந்தெடுப்பார். அத்தகைய திருமணத்திலிருந்து பிறக்கும் குழந்தைகள் நல்ல தோற்றம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.” என்று பேசியுள்ளார்.
இவரது இந்த சர்ச்சை பேச்சு வலுத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது. மேலும் இவர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் தேவேந்திர புயர் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் எதிர்க்கட்சியினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருவதோடு, பாஜக ஆதரவு எம்.எல்.ஏ., தேவேந்திர புயர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !