India
நவீன கர்ணர் என்று புகழப்பட்ட பிரபல யூடியூபர் மீது பாலியல் புகார் : பின்னணி என்ன? ஆந்திராவில் அதிர்ச்சி !
25 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே YOUTUBE -இல் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக அவரின் வீடியோகளுக்கு SUBSCRIBERS வரத்தொடங்கினர்.அதன் பின்னர் 4 லட்ச ரூபாய் காரை 5 முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதை தனது சேனலில் வெளியிட்டார்.
இந்த சம்பவத்தில் பெரும் புகழ் பெற்ற அவருக்கு மீடியா வெளிச்சமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட அவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் சென்றது.இதன் பின்னர் YOUTUBE மூலம் தான் சம்பாதிக்கும் காசினை மக்களுக்கு செலவிட நினைத்த அவர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் ஹிட் கொடுக்க அதன்பின்னர் பலருக்கு உதவ தொடங்கினார்.ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல் என்னும் அளவுக்கு பெட்ரோல் போட்டு கொடுப்பது என தற்போது ஒரு வள்ளல் என்ற அளவில் பேசப்படுகிறார்.
தொடர்ந்து தற்போது ஒரு படம் ஒன்றையும் தயாரித்து அதில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில், ஹர்ஷா சாய் மீது பெண் ஒருவர் பாலியன் வன்கொடுமை புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 25 வயது நடிகை ஹர்ஷா சாய் தன்னை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிர்வாணமாகப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த புகாரின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதோடு விரையில் இந்த வழக்கில் ஹர்ஷா சாய் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !