India
”உண்மையை சகிக்க முடியாமல் பொய்களை பரப்புகிறது பா.ஜ.க ” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
இந்தியா கூட்டணியால் தங்களது ஆசை நிராசையானதை அடுத்து பா.ஜ.க தலைவர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியை ’பப்பு’ என கேலி பேசினார்கள்.
ஆனால், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தைக் கண்டு பா.ஜ.க அஞ்சியது. ’பப்பு’ என்று கேலி செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ.கவிற்கு சவால்விட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் திணறிவருகிறார்கள்.
தற்போது, அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியதை திரித்து அவருக்கு எதிராக வெறுப்புணர்வை பா.ஜ.கவினர் பரப்பி வருகிறார்கள். மேலும் அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் உண்மையை சகிக்க முடியாமல் பா.ஜ.க பொய்களை பரப்புகிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"அமெரிக்காவில் நான் கூறிய கருத்தை திரித்து பொய்களை பா.ஜ.கவினர் பரப்பி வருகிறார்கள்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதர சகோதரிகளையும் நான் கேட்க விரும்புகிறேன் - நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஒவ்வொரு சீக்கியரும் - ஒவ்வொரு இந்தியனும் - அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா?
வழக்கம் போல் பா.ஜ.க பொய்களை பரப்புகிறது. அவர்கள் உண்மையைச் சகிக்க முடியாததால் என்னை அமைதிப்படுத்த துடிக்கிறார்கள். ஆனால் நான் இந்தியாவுக்காக எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!