India
4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவாகர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது மனைவி உயிரிழந்தார். பின்னர் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இரண்டாவது மனைவிக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்த்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திவாகர் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தந்தை திவாகரை கைது செய்தனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!