India
”ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க துடைத்தெறியப்படும்” : கன்னையா குமார் திட்டவட்டம்
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு செப்.18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - பேந்தர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்த “இந்தியா” கூட்டணி போட்டியிடுகிறது.
அதேபோல் பா.ஜ.கவும், ஜனநாயக கட்சியும் தனித்தனியாக இந்த தேர்தலை சந்திக்கிறார்கள். இதனால் மும்முணை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளையுடன் முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பா.ஜ.க துடைத்தெறியப்படும் என காங்கிரஸ் நிர்வாகி கன்னையா குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி கொடுத்துள்ள கன்னையா குமார், “ஒன்றிய பா.ஜ.க ஆட்சியால் கடந்த 10 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதியால் மக்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. காஷ்மீர் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளால் காஷ்மீர் மக்கள் பா.ஜ.கவை எதிர்த்து வாக்களிப்பார்கள். ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க துடைத்தெறியப்படும்” என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறிது. இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட தேர்தல் செப்.25 ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!