India
ஒரு மாதம் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொய்ராவுனா. இவர் கடந்த மே மாதம் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. வீர்நாத் பாண்டே என்ற நபர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வீர்நாத் பாண்டே ஜாமீன் பெற்று அண்மையில் வெளிவந்துள்ளார். பிறகு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் அச்சிறுமியை கடத்தி சென்று ஒரு மாதத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலிஸார் வீர்நாத் பாண்டேவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியை கடத்தி ஒரு மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை தடுக்காமல் பா.ஜ.க அரசு வேடிக்கைப் பார்த்து வருவதாக மாதர் சங்க அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது.
Also Read
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!