India
ஜம்மு காஷ்மீர் தேர்தல் : பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி கொடுத்த காஷ்மீர் பண்டிட்டுகள்!
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு செப்.18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - பேந்தர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்த “இந்தியா” கூட்டணி போட்டியிடுகிறது.
அதேபோல் பா.ஜ.கவும், ஜனநாயக கட்சியும் தனித்தனியாக இந்த தேர்தலை சந்திக்கிறார்கள். இதனால் மும்முணை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மட்டுமே எங்களைப் பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பி, சட்டமன்ற தேர்தலை புறக்க ணிக்கப்போவதாக காஷ்மீர் பண்டிட்டுகளின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் பண்டிட்டுகளின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில்,”ஜம்மு-காஷ்மீரில் நாங்கள் பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்த சமூகமாக இருந்து வருகிறோம். அடுத்தடுத்து வந்த அரசுகளும், அரசியல் கட்சிகளும் எங்களை பற்றியோ, எங்களது பிரச்சனைகளை பற்றியோ தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுகின்றனர்.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் காஷ்மீர் பண்டிட்களை வைத்து சில கட்சிகள் ஆதாயம் பெற்று வருகின்றன. ஆனால் தேர்தல்களில் தங்களுக்கு என்று பிரதி நிதித்துவம் எதுவும் செய்யவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அவர் கூறினார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!