India
சாலையில் செல்லும் போது திடீரென பற்றி எரிந்த BMW கார்: நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் BMW சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் சூரத்கல் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது திடீரென பற்றி எரிந்தது.
கார் பற்றி எரிந்த சில நிமிடத்திலேயே அதில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே BMW கார் பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
-
"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !
-
”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!