India
இந்தியாவின் AI மையமாகும் தமிழ்நாடு! : முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் Google, Amazon நிறுவனங்கள்!
இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள், 500 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக வைத்து நகரும் சூழலில், தமிழ்நாடு மட்டும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி செயலாற்றி வருகிறது.
அதற்கேற்ப, உலகின் முன்னணி நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை தமிழ்நாட்டில் செலுத்தி வருகின்றன. அதன் வெளிப்பாடாகவே, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செயல்படுத்தத்திலும், தமிழ்நாடு தனி இடம் பிடிக்கும் முனைப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
அதன் முனைப்பாக, Google, PayPal, Applied Materials, Amazon Web Services உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தமிழ்நாட்டில் AI ஆய்வு மையங்களை தொடங்கவும், தமிழ்நாடு அரசுடனும், தமிழ்நாட்டு மக்களுடனும் இணைந்து பணிபுரியவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக, Google நிறுவனமும் தமிழ்நாடு அரசும் இணைந்து, 20 இலட்சம் இளைஞர்களை AI தொடர்பான பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகப்படியான பொறியாளர்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கும் சூழலில், ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களது பட்டப்படிப்புகளை முடித்து, கூடுதல் தகுதிபெற்றவர்களாய் உருவாகி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் முயற்சிகளால் இளைஞர்களை தொழில் சார்ந்து உயர்த்தும் “நான் முதல்வன்” உள்ளிட்ட திட்டங்கள், AI வளர்ச்சிக்கு மிகுந்த அளவில் கைக்கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து AI வல்லுநர் ஜிபு எலியாஸ், “பாதுகாப்பான மற்றும் சரியான AI வழிமுறைகளை வகுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒரு வளர்ச்சி சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனை Google-ம் சரியாக கண்டெடுத்து, தமிழ்நாட்டில் தங்களது பணிகளை தொடங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!