India
“தமிழ்நாட்டைப் போலவே சிறப்பாக செயல்படுவோம்” : தமிழ்நாட்டிற்கு வந்த டி.கே.சிவக்குமார் பாராட்டு !
கர்நாடக மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் பார்வையிட்டார்.
அந்த வகையில் ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட குப்பை சேகரிக்கும் தனியார் நிறுவனத்திலும், சேத்துப்பட்டில் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் Bio - cng ( compressed natural gas) இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டார்.
அடுத்ததாக கொடுங்கையூர் மற்றும் மாதவரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,
கர்நாடகாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக தமிழ்நாட்டில் 15 அதிகாரிகளுடன் பார்வையிட வந்திருக்கிறேன். பெருமளவிலான திடக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது அதிலிருந்து எவ்வாறு இயற்கை எரிவாய் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் விவரித்தனர்.
அதனை கேட்டு தெரிந்து கொண்டோம், கர்நாடகாவில் மேம்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை இருந்தாலும் அதை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு இந்த பயணம் உதவும் என நம்புகிறேன், கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது தான் வர வாய்ப்பு கிடைத்தது” என்றார்
மேலும் பேசிய அவர், “மேகதாது விவகாரம் தொடர்பாக நான் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. எனினும் இரண்டு மாநிலங்களுக்கும் மழை உதவும் என நம்புகிறேன். மேகதாடு அணை கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. தற்போது மழை கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் நன்றாக பெய்துள்ளது. எனது நல்ல நண்பர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊரில் இல்லை. எனவே அதற்கு பதிலாக யார் இருக்கிறார்களோ அவரை சந்தித்து விட்டு செல்வேன்” என்று தெரிவித்தார்.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!