India
மாதபி புச் மீதான ஊழல் புகாரை அம்பலப்படுத்திய ICICI : காங்கிரஸ் சொல்லும் குற்றச்சாட்டு என்ன?
பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் தலைவராக இருக்கும் மாதபி புச், அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்பட்ட அதிர்ச்சித்தகவல் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் வெளியானது.
மேலும், மாதபி புச் செபியின் தலைவராவதற்கு முன் அதன் உறுப்பினராக இருந்த 2017 முதல் 2022 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ஐசிஐசிஐ வங்கியிலும் மாதபி புச் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன்கேரா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பவன்கேரா, மாதபி புச் மீதான புகாருக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கியுள்ள பதில், அவர் மீதான ஊழலை மேலும் அம்பலப்படுத்துவதாக உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த ஐந்தாண்டு காலத்தில் மாதபி புச் 16 கோடியே 80 லட்சம் ரூபாயை ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ஊதியமாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், மாதபி புச், விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஆண்டுக்கு 2 கோடியே 77 லட்சம் ரூபாயை ஓய்வூதியப் பலனாக ஐசிஐசிஐ வங்கி எப்படி வழங்கியது என்றும், ஊதியத்தை விட ஓய்வூதியம் எப்படி அதிகமாக இருக்க முடியும் என்றும் கேள்விகளை எழுப்பிய பவன்கேரா, இந்த குற்றச்சாட்டுகளுக்கு செபி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!