India
பசுக் காவலர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்: ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்!
பா.ஜ.க ஆட்சியில் பசுக் காவலர்கள் கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. ஹரியானாவில் 12 ஆம் வகுப்பு மாணவன் பசு கடத்தல்காரன் என்று நினைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரத்தை சேர்ந்த ஆரியன் மிஸ்ரா என்ற மாணவன் தனது நண்பர்களுடன் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காரில் சென்றுள்ளார். அப்போது கும்பல் ஒன்று இவர்களது காரை நிறுத்த முயற்சித்துள்ளது.
இரவு நேரம் என்பதால் இவர்கள் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். பிறகு பின்தொடர்ந்து வந்த இந்த கும்பல் துப்பாக்கியால் காரை நோக்கி சுட்டுள்ளது. இதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆரியன் மீது குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து, அனில் கௌசிக், வருண், சௌரப், கிரிஷன், ஆதேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பசுக் கடத்தல்காரர்கள் என்று நினைத்து அவர்களை சுட்டதாக குற்றவாளிகள் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!