India
ஆந்திரா - தெலங்கானாவில் கனமழை எதிரொலி! : சென்னையில் இருந்து செல்ல இருந்த 7 ரயில்கள் முழுவதுமாக ரத்து!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகே நேற்று அதிகாலையில் கரையை கடந்தது..
அதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் வட இந்திய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பிரதான மாநிலமாக ஆந்திரா இருக்கக்கூடிய நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள பெரும்பாலான ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரயில்கள் மாற்றுப்பாதையிலும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆந்திரா வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் இன்று நீக்கமும் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு நிஜாமுதீன் செல்ல இருந்த நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயிலும், காலை 7 மணிக்கு ஷாலிமர் செல்லவிருந்த கோரமண்டல் விரைவு ரயிலும், காலை 10.10 மணிக்கு அகமதாபாத் செல்லவிருந்த நவஜீவன் அதிவிரைவு ரயிலும், மாலை 3.40 மணிக்கு பில்சாபூருக்கு செல்ல விருந்த பில்சாபூர் வார அதிவிரைவுரையிலும், மாலை 5.40 மணிக்கு சாப்ரா செல்லவிருந்த கங்கா காவேரி விரைவு ரயிலும், மாலை 6.40 மணிக்கு புதுடெல்லிக்கு செல்லவிருந்த கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயிலும், இரவு 10 மணிக்கு புதுடில்லி செல்லவிருந்த தமிழ்நாடு விரைவு ரயிலும் என சென்னை சென்ட்ரலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல இருந்த 7 ரயில்கள் இன்று நாள் முழுவதும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளா மாநிலம் கொச்சுவெள்ளியில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கோர்பா செல்ல விருந்த ரயிலும், பூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வர வேண்டிய ரயிலும் என 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை தாம்பரத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு எழும்பூர் வழியாக செல்லவிருந்த சார்மினார் விரைவு ரயிலும் இன்று நாள் முழுவதும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் SMVT பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக தானாப்பூர் செல்ல விருந்த சங்கமித்ரா அதிவிரைவு ரயிலும் கே.எஸ்.ஆர் பெங்களூரு ஜங்ஷனிலிருந்து பெரம்பூர் வழியாக தானாப்பூர் செல்ல விருந்த தானாப்பூர் கிளோன் சிறப்பு ரயிலும் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?