India
மயக்க மருந்து கொடுத்து செவிலியர் பாலியல் வன்கொடுமை : மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூரம் !
மகாராஷ்டிராவில் ரத்னகிரியைச் சேர்ந்த 19 வயது பயிற்சி செவிலியர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அந்த செவிலியர் ஆட்டோ ஒன்றில் ஏறி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த செவிலியருக்கு அருந்த தண்ணீர் கொடுத்துள்ளார். அதனை அந்த செவிலியர் அருந்திய நிலையில், அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவர் ஆட்டோவில் மயங்கி சரிந்துள்ளார்.
செவிலியர் மயங்கியதை உறுதிப்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றதும், செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து அவரை அங்கேயே போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.
மயக்கம் தெளிந்து எழுந்த அந்த செவிலியர் தனக்கு நடந்த அந்த கொடுமையை அறிந்து, அங்கிருந்து வீட்டுக்கு வந்து இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், குற்றவாளியை கண்டுபிடிக்க போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறி, செவிலியரின் உறவினர்கள் ரத்னகிரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !