India
ஜம்மு - காஷ்மீரின் மாநில தகுதியை மீட்டெடுக்கும் முனைப்பில் இந்தியா கூட்டணி! : ஆலோசனையில் ராகுல் காந்தி!
2014ஆம் ஆண்டு இறுதியில் தான், இறுதியாக ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதாவது, ஒன்றிய பா.ஜ.க தொடங்கப்பட்ட காலம்.
அதன் பிறகு, தற்போது பா.ஜ.க.வின் பாசிச அரசியலுக்கு இந்தியா கூட்டணியின் வழி முடிவுகட்டப்பட்ட பின்பு தான், அங்கு தேர்தல் பேச்சு எழுந்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில், ஜம்மு - காஷ்மீரின் மாநில ஆட்சி கவிழ்ப்பு, மாநில தகுதி நீக்கம், சிறப்பு தகுதி தரும் சட்டம் 370 நீக்கம், அதிகப்படியான தீவிரவாத தாக்குதல்கள், அப்பாவி மக்கள் மீது ராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல் என கொடுமைகளை பட்டியலிட எண்ணினால், சொல்லிக்கொண்டே போகலாம்.
அதன் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பா.ஜ.க.விற்கு எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டிற்குள் ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்று, தேர்தலுக்கான நாட்களை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ள ஜம்மு - காஷ்மீருக்கு விரைந்துள்ளனர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும்.
அலோசனைகளுக்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்திருக்கும் உரிமை மறுப்பு வலியை போக்கி, ஜம்மு - காஷ்மீரின் மாநில தகுதியை திரும்பப் பெற்றுத்தருவதும், பிரதிநிதித்துவத்தை மீட்டு தருவதும் தான் என் முதன்மை இலக்கு” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !