India
காதலித்த மகள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல் - மத்திய பிரதேசத்தில் பகீர் சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியவர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜதே என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் சஞ்சான வீட்டிற்கு தெரிந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் காதல் தொடர்ந்ததால் சஞ்சான வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே மீண்டும் காதல் தொடர்பான சண்டை ஏற்பட்டுள்ளது. ஆப்போது ஆவேசமடைந்த தந்தை பிரஜாபதி மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சஞ்சனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பிறகு காதலித்தால் மகளை கொலை செய்த தந்தை பிரஜாபதியை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!