India
பிரதமரின் பேச்சு மட்டும் ஏன் இடைமறிக்கப்படுவதில்லை? : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம்!
இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவையில், சிறுபான்மையினரும், உழைக்கும் வகுப்பினரும், இளைஞர்களும், விவசாய பெருமக்களும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் சற்றும் எதிர்பாராத வகையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஒன்றிய பட்ஜெட் அமைந்தது.
இதனால், இப்பட்ஜெட் சர்வாதிகாரத்தை மேலும் நிலைநாட்டும் வகையிலும், முதலாளித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், ஒன்றிய முகமைகளை வலுப்படுத்தும் வகையிலுமே அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அவ்வகையில், இன்று (29.7.24) நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதத்தின் போது பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்பார்த்த சர்வாதிகாரத்தை வலுகுன்ற செய்யும் வரையறைகளும், உழவர்கள் மற்றும் இளைஞர்களின் பொருளியல் நிலையை மேம்படுத்தும் வரையறைகளும், தொழிலாளர்கள் மற்றும் குறு சிறு தொழில்களை முன்னோக்கி வழி நடத்தும் வரையறைகளும் இடம்பெறாமல், முற்றிலும் ஏமாற்றம் தரக்கூடிய முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரத்தை வலுப்படுத்தும் வரையறைகளும், மக்களாட்சியை சிதைக்கும் வரையறைகளும், ஒன்றிய முகமைகளை மேலும் வலுப்படுத்தும் வரையறைகளுமே இடம்பெற்றுள்ளன” என குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசிய போது, “இந்தியாவின் வணிகமே இருவரை சார்ந்து தான் இருக்கிறது. அவர்களிடம் தான் விமான நிலையம், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள் என பல துறைகள் உள்ளன. அதில் ரயில்வேயும் விரைவில் இடம்பெறவுள்ளது” என தெரிவித்தார். அப்போது அவர் அதானி - அம்பானி பெயர்களை முன்மொழிய வந்த போது, அதுவரை ஓரளவு பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், உடனடியாக இடைமறித்தனர்.
இதனால், நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் அமளி ஏற்பட்டது. “நாடாளுமன்ற மக்களவையில், பிரதமரோ அல்லது பிற அமைச்சர்களோ பேசினால் சபாநாயகர் இடைமறிப்பதில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பேசினால் மட்டும் இடைமறிக்கின்றார்” என மக்களவை உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
எனினும், அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து, அம்பானி - அதானி குறித்து பேச ராகுல் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இருவர் கைக்குள் பல துறைகள்” என தெரிவித்தது உண்மை தான் என்ற எண்ணமும் வலுக்கத்தொடங்கியுள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!