India
ம.பி.யில் கொடூரம் : 9 வயது தங்கையை வன்கொடுமை செய்து கொன்ற சிறுவன் : உண்மையை மறைத்த தாய், சகோதரிகள் !
மத்திய பிரதேச மனிதம் ரேவா பகுதியில் ஒரு வீட்டில் ஒன்பது வயது சிறுமி இறந்ததாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சிறுமியின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அதில் விசபூச்சு கடித்து சிறுமி இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது பெரும் அதிர்ச்சி உண்மை ஒன்று தெரியவந்துள்ளது.
வீட்டில் 9 வயது சிறுமியும், 13 வயது சகோதரனும் ஒன்றாக உறங்கியுள்ளனர். சிறுவன் தனது மொபைலில் ஆபாச படம் பார்த்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் சிறுமி யாரிடம் இதனை சொல்லக்கூடாது என்பதற்காக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் இது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகள் இதனை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலிஸார் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!