India
”நிதி அயோக்கால் நாட்டுக்கு நன்மை இல்லை” : சஞ்சய் ராவத் விமர்சனம்!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதாக அறிவித்த நிதியை விடுவிப்பதாக கூட எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் ஆகியோருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், நிதி அயோக்கால் நாட்டுக்கு நன்மை இல்லை என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், "இந்தியா கூட்டணி முதலமைச்சர்கள் நிதி அயோக் கூட்டத்துக்கு செல்ல மாட்டார்கள். அந்தக் கூட்டத்துக்கு செல்ல விரும்பாத பிற முதலமைச்சர்களும் இருக்கின்றனர். ஏனெனில் நிதி அயோக்கால் நாட்டுக்கு வளர்ச்சி ஏற்படவில்லை. நிதி அயோக்கின் செயல்பாட்டுக்கு ஒன்றுமில்லாத இந்த பட்ஜெட்தான் சிறந்த உதாரணம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!