India
”பா.ஜ.க ஆட்சியால் ஒரு பயனும் இல்லை” : ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து இந்தியா கூட்டணி MP-க்கள் போராட்டம்!
2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதல் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தயா கூட்டணி ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 27 ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தி.மு.க எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து ஒன்றிய அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்,”பட்ஜெட்டில் உத்தரப்பிரதேசத்துக்கு ஒன்றும் வழங்கப்படவில்லை. உத்தரப்பிரதேச மக்கள் டெல்லியை கோபப்படுத்தி விட்டார்களென நினைக்கிறேன். அதன் விளைவு, பட்ஜெட்டில் வெளிப்படையாக தெரிகிறது. ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியிலிருந்து ஒரு பயனும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!