India
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் - சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் : உத்தரகண்டில் இந்துத்துவா கும்பல் அராஜகம்!
பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் புகுத்து இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரகண்ட் தலைநகர் டேராடூனின் நேரு காலனியில் அண்மையில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர டோபால் என்பவர், ”இங்கு மதமாற்றம் நடைபெறுகிறது. அதனால் இனிமேல் பிரார்த்தனை கூட்டம் நடத்தக்கூடாது” அடியாட்களை கொண்டு மிரட்டியுள்ளார்.
அப்போது, கிறிஸ்தவர்கள், நாங்கள் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. அமைதியான முறையில்தான் நாங்கள் பிரார்த்தனை கூட்டம் நடத்துகிறோம் என கூறியுள்ளனர். உடனே இந்துத்துவ குண்டர்கள் வேண்டும் என்றே அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அங்கிருந்த சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் , போலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!