India
lift-ல் மாட்டிக் கொண்ட நபர் : 2 நாட்களுக்கு பிறகு மீட்பு - நடந்தது என்ன?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் நாயர். 59 வயதாகும் இவர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த சனிக்கிழமை அன்று அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளளார்.
அப்போது அவர் முதல் தளத்திற்கு செல்வதற்காக lift-டை பயன்படுத்தியுள்ளார். இவர் உள்ளே சென்றதும் lift வேலை செய்யவில்லை.மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப்பாகியுள்ளது.
lift-ல் இவர் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டார். இவர் உதவிக்காக கூச்சலிட்டதும் வெளியில் இருந்த யாருக்கும் கேட்கவில்லை.
இதையடுத்து திங்களன்று lift ஆபரேட்டவர் வழக்கமான பணிக்காக liftடை இயக்கியுள்ளார். அப்போதுதான் கடந்த இரண்டு நாட்களாக ஒருவர் மாட்டிக் கொண்டனது அனைவருக்கும் தெரிந்தது.
இரண்டு நாட்களாக உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டுவந்துள்ளார் ரவீந்திரன். மேலும் இவர் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களாக lift மாட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!