India
நீட் முறைகேட்டை தொடர்ந்து பீகார் ஆசிரியர் தேர்விலும் முறைகேடு : அதிரடியாக கைது செய்யப்பட்ட 17 பேர் !
நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.
இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. தொடர்ந்து இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அங்கு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே நீட் தேர்வுக்கு முதல் நாள் இரவு, நீட் வினாத்தாள் கிடைத்ததாக இதன் மூலம் ஏராளமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், நீட் கேள்வித்தாள் கசிவில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
எய்ம்ஸ் பி.ஜி நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் கசிவு, உத்தரப் பிரதேச காவலர் தேர்வு என பல தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது. இந்த நிலையில், பிகார் ஆசிரியர் தேர்விலும் பெரும் மோசடி நடந்திருக்கும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெகுசராய், தார்பங்கா, சரண் ஆகிய இடங்களில் இருந்து 3 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் இருந்து இதுபோன்று தொடர் தேர்வு முறைகேடுகள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘முடிந்துவிட்டது’ என்றுதான் சொன்னேன், அது இன்றைக்கு பெரிய வைரலாகிவிட்டது!” : முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின்!
-
ரூ.6 கோடி மதிப்பீட்டில் ‘மதுரை ஒலிம்பிக் அகாடமி’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த கரந்தை தமிழ்ச் சங்கம்!” : துணை முதல்வர் உதயநிதி உரை!
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!