India
நீட் முதல் சட்டத் தேர்வு வரை... பாஜக அரசின் அலட்சியம்... கேள்விக்குறியாகும் தேர்வு நடைமுறைகள் !
நடப்பாண்டில் நடைபெற்ற நீட் இளநிலை தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பல கோடி லஞ்சம் கொடுத்து வினாத்தாள்கள் பெற்றதும், வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் வழங்குதல் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இந்த முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பேராசிரியகர்களுக்கான NET தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரமும் வெளியே வந்தது. இதையடுத்து அந்த தேர்வு முடிந்த மறுநாளே தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நீட் முதுநிலை தேர்வும் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து SET தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து தேர்வுகள் ரத்து செய்யப்படுவதும், ஒத்திவைக்கப்படுவதும் அரங்கேறி வரும் நிலையில், பெரும் முறைகேடு நடந்த நீட் இளநிலை தேர்வு மட்டும் ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதற்கு கண்டனங்கள் எழுந்தது. மேலும் இந்த முறைகேடு விவகாரத்தில் அடுத்தடுத்து என பல தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த தேர்வுகளை தொடர்ந்து சட்ட தேர்வையும் ஒத்தி வைத்துள்ளது டெல்லி பல்கலைக்கழகம். டெல்லி பல்கலை-யில் நடைபெறும் சட்டப்படிப்பு தொடர்பான 2, 4, 6 ஆகிய தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. இன்று (ஜூலை 4) நடைபெறுவதாக இருந்த அந்த தேர்வுகள், எந்த காரணமும் கூறாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. தேர்வு நடைமுறை குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகிறது. பலரும் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது சமூக வலைதள பக்கத்தில், "இப்போது டெல்லி பல்கலைக்கழகமும் சட்டத் தேர்வுகளைக் கூட ஒத்தி வைத்துள்ளது. இந்தியாவில் தேர்வுக் நடைமுறை முற்றிலும் கட்டுப்பாடில்லாமல் போகிறது" என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!