India
நீட் முறைகேடு : கொரியர் நிறுவனத்தின் மேலாளர் தலைமறைவு : காவலில் எடுக்கப்படும் பள்ளிக்கூட முதல்வர் !
நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தது.
இது குறித்து தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி அத்ரி என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் கேள்வித்தாள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கசிந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பிகார் மாநிலத்தில் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேள்வித்தாள்களை தடைய அறிவியல் சோதனைக்கு உட்பட்டதில் 68 கேள்விகள் உண்மையான கேள்வித்தாளுடன் ஒத்துப் போவதாக பிஹார் போலீசார் கண்டறிந்துள்ளனர்.இந்தக் கேள்வித்தாளில் உள்ள வரிசை எண்களை சோதித்த போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தின் எண் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் சென்று பீகார் போலீசார் சோதனை நடத்தினர். அந்த தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள் வைத்திருந்த பாக்கெட் பின்புறம் திறக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கேள்வித்தாள் விநியோகித்த கொரியர் ஊழியர்களிடமும் நேற்று CBI போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஆஜராகாமல் கொரியர் நிறுவனத்தின் மேலாளர் தலைமறைவாகியுள்ளார்.
இதனிடையே தேர்வு நடந்த பள்ளி முதல்வரை காவலில் எடுத்துள்ள CBI அதிகாரிகள் தொடர் விசாரணைக்காக பாட்னா அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விசாரணைகளைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக கைது செய்யப்பட்ட மாணவர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!